மத்திய மாகாணத்தின் அனைத்து மதுபான கடைகளும் தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மத்திய மாகாணத்தின் ஆளுநர் மைத்திரி குணரட்னவின் உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை மதுபான கடைகள் திறந்திருந்த போதிலும் பிற்பகல் 2.00 மணியளவில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் என்ன காரணத்திற்காக இவ்வாறு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரங்களும் வெளியிடப்படவில்லை.