உலகக்கோப்பை அணியின் கேப்டன் திடீர் மாற்றம்!!

ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐபில் போட்டி வரும் ஞாயிறு அன்று முடிவுக்கு வரும் நிலையில் இந்த மாதம் இறுதியில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகிறது.

உலக கோப்பை போட்டியில் விளையாடும் அணைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அஸ்கர் ஆஃப்கான் தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்து வந்தார். இவரது தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு வெற்றிகளையும், கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது.

சிறப்பாக ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய அவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் குல்பாதின் நைஃப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆப்கானிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் கூறுகையில், “இந்த உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் அணியால் நிச்சயம் வெல்ல முடியாது. எனவே அடுத்த உலக கோப்பைக்கு நாங்கள் இப்போதே தயாராகி வருகிறோம்.

அடுத்த உலக கோப்பை போட்டிக்கு நிச்சயம் நைஃப் தான் கேப்டன். உலக கோப்பை வாய்ப்பை பயன்படுத்தி சர்வேத அணிகளின் நிலை, ஆப்கான் வீரர்களின் நிலையை நைஃப் புரிந்துகொள்ளவே அவரை கேப்டனாக தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார்.