பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசையை காட்டிய இளைஞர்.!

வேலூரைச் சேர்ந்த தோட்டப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. 45 வயது நிறைந்த இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி வேளாங்கண்ணி.

இவர்கள் இருவரும் நேற்று மதியம் தங்களது பக்கத்துவீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த அண்டாவை தூக்கிக்கொண்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவ்வழியே சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வந்த நபர், அண்டாவை தூக்கிக்கொண்டு அவசரஅவசரமாக வெளியேறிய வாலிபரை கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் திருடன் என கூச்சலிட்டுள்ளார்.அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அங்கு வந்த சத்தியமூர்த்தி மற்றும் வேளாங்கண்ணியிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஊர்மக்கள் அண்டாவை திருடி சென்ற வாலிபரை அந்த அண்டாவுக்கு உள்ளேயே நிற்க வைத்து, மின்கம்பத்தில் கட்டி தர்ம அடி கொடுத்து வெளுத்தி எடுத்துள்ளனர். இதற்கிடையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் வேலூர் வள்ளலாரை சேர்ந்த காலிஷா என்று தெரியவந்தது. மேலும் அந்த இளைஞன் ஏற்கனவே அதே தோட்டப்பாளையம் பகுதியில் கோவில் உண்டியலை திருடி மக்களிடம் மாட்டி தர்ம அடி வாங்கியுள்ளார் எனவும் தெரியவந்தது .இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.