பேட்டியில் கண்கலங்கிய போனி கபூர்! வைரல் வீடியோ

அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர். அதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் போனி கபூரிடம் ஸ்ரீதேவி இழப்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கண்கலங்கியுள்ளார்.

உங்கள் மனைவியை மிஸ் பண்ணாத நாள் உண்டா? என்ற கேள்விக்கு கண்ணீரை அடக்கிக்கொண்டு அவர் பதில் அளித்துள்ளார். “It’s impossible” என அவர் கூறினார்.

மேலும் சினிமாவில் அதிகம் நஷ்டம் அடைந்தது பற்றி பேசிய அவர், “நான் தவறாக எதுவும் செய்யவில்லை.. சூதாட்டத்தில் பணத்தை இழக்கவில்லை. நான் செய்வதை புரிந்துகொள்ள ஒருவர் இருந்தார். மனைவியின் ஆதரவு தான் முக்கியம்” என அவர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.