மதங்கள் இருப்பது எதார்க்காக தெரியுமா? வாட்சப் வைரல் கதை!!

ஒவ்வொரு மதமும், பிறரை மதிக்க வேண்டும். பிறரின் உணர்வுகளை மதிக்க வேண்டும். ஒற்றுமையோடு வாழவேண்டும் என்பதையே உணர்த்துகிறது. பிறரை தாழ்த்தி தான் நாம் உயர்ந்தவர் என நிரூபிக்க வேண்டும் என அவசியமில்லை. அவரவர் நிலையில் அவரவர் உயர்வு தான். பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவனே உயர்வானவன் என்பதை இந்த வாட்சப் வைரல் கதை உங்களுக்கு எடுத்துரைக்கும்.

வாட்சப் வைரல் கதை பின்வருமாறு:

“ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில்
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,

திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது

அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன

வழியில் ஒரு தேவாலயத்தைக் கண்டன.

அங்கும் சில புறாக்கள் இருந்தன

அவைகளோடு இந்த புறாக்களும்
குடியேறின.

சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது.

தேவாலயம் புதுப்பிக்கத் தயாரானது

இப்போது இங்கு இருந்து சென்ற
பறவைகளும்
அங்கு இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு மசூதியைக் கண்டது.

அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு
இந்த புறாக்களும் குடியேறின

சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது
வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின…

கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக் கொண்டு இருந்தனர்.

ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது
“ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?”
என்று…

அதற்கு அந்த தாய் புறா சொன்னது

“நாம் இங்கு இருந்த போதும் புறா தான்,

தேவாலயத்துக்கு போன போதும் புறா
தான்,

மசூதிக்கு போன போதும் புறா தான் “,

“ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து”
சர்ச்க்கு போனால்
கிறிஸ்த்தவன்”
மசூதிக்கு போனால்”முஸ்லிம்” என்றது;

குழம்பிய குட்டி புறா”
அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்”என்றது.

அதற்கு தாய் புறா ”

இது புரிந்ததனால்
தான் நாம் மேலே இருக்கிறோம்,
அவர்கள் கீழே இருக்கிறார்கள்” என்றது.”என்பதே அந்த கதையாகும்.