தனது தந்தையுடன் இணைந்து ஐஎஸ் இயக்கத்தில் பணியாற்றிய சிறுவன்

தனது தந்தையுடன் இணைந்து ஐஎஸ் இயக்கத்தில் பணியாற்றிய சிறுவன் தற்போது மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தனது கடந்தகால வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.

மத்திய கிழக்கு ஆராய்ச்சி குழுவான MEMRI – க்கு 15 வயது சிறுவன் முஸ்தபா அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எனக்கு 12 வயது இருக்கையில் எனது தந்தையுடன் இணைந்து ஐஎஸ் இயக்கத்தில் பணியாற்றுவதற்கு நிர்பந்திக்கப்பட்டேன்.

அங்கிருப்பவர்கள் என்னை மூளைச்சலவை செய்து, ஆயுதங்களை எனது கையில் கொடுத்து எனக்கு பயிற்சி அளித்தார்கள்.

ரத்தம் தோய்ந்த நிலையில் இருக்கும் உடல்களின் தலையை வெட்டி, அதனை புகைப்படம் எடுக்கும் பணி எனக்கு கொடுக்கப்பட்டது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதற்கு ஆதாரமாக அதனை புகைப்படம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது, அந்த பணியையே மட்டுமே செய்து வந்தேன்.

வடக்கு ஈராக்கில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட 3 யாஸிதி பெண்களை நானும், தந்தையும் அங்கிருந்து காப்பாற்றினோம். யாஸிதி பெண்கள் சுத்தமாக வீட்டு வேலைகள் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டனர்.

ஐஎஸ் பயங்கரவாதிகள் என்னைபோன்ற சிறுவர்ளை போர்க்காலத்தில் பயன்படுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினர். என் கண்ணெதிலேயே பலரின் தலைகள் வெட்டப்படுவதை பார்க்க மிகவும் பயமாக இருந்தது, இருப்பினும் சத்தம் எதுவும் போடாமல் அச்சத்தில் மிகவும் அமைதியாக இருந்தேன்.

கடந்த ஆண்டு Al-Tabqa யில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டேன். இங்கு எனது வாழ்க்கை மாறிவிட்டது. நான் பார்த்த கொடுமையான காட்சிகளை இங்கு பார்க்க முடியாத அளவுக்கு எனக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளான்.

சிரியாவின் வடக்குபகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாக அரசு தெரிவித்தாலும் இந்த இயக்கும் பரவும் ஆபத்து உள்ளது என ஈராக், சிரிய மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.