உலக நாடுகள் பல கண்டனம்

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை உலக நாடுகள் பல கண்டித்துள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பதிவில், மிலேட்சத்தனமான செயலுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்துள்ளதாக இந்த செய்தியில், பயங்காரவாத செயற்பாடுகளுக்கு எதிராக போரிட வேண்டும்.

சம்பத்துடன் தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவித் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தமது தமது சோகத்தை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.