பாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி!

பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் கலந்துகொண்டு தனது இனிமையான குரல் வளத்தால் வெற்றி பெற்றவர் பிரியங்கா.

அவருடன் இணைந்து அண்மையில் ஈழச் சிறுமி சின்மயி பாடல் ஒன்றை படியுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

குறித்த பாடல் தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. அது மாத்திரம் இல்லை, ஈழச் சிறுமி சின்மயி வெற்றிபெற வேண்டும் என்று புலம்பெயர் தமிழர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவரை வெற்றிபெற செய்ய ஒருவர் 50 வாக்கு வீதம் வழங்க முடியும். மேலும், இந்த மாதம் 21ஆம் திகதி வரை அவருக்கு வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது