நேற்று நடந்தது டெஸ்ட் போட்டியா?? காரி துப்பும் ரசிகர்கள்!

ஐபில் போட்டியின் 23 வது ஆட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை டெஸ்ட் மேட்சை விட மோசமாக ஆடியது.

கொல்கத்தா அணியின் அணைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா அணியின் அதிரடி மட்டையாளர் ரஸ்ஸல் அதிகபட்சமாக 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்திருந்தது.

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியும் ஆரம்பத்தில் சொதப்பியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதனையடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 13 பந்துகளில் 14 ரன்கள் அடித்து நரேன் ஓவரில் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சென்னை அணியின் மட்டையாளர்களும் கொல்கத்தாவின் பந்து வீச்சிற்கு தடுமாறினர். சென்னை வீரர்களும் டெஸ்ட் மேட்ச் போலவே பேட்டிங் செய்தனர். இதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் வேதனையடைந்தனர்.

சென்னை அணியின் அம்பதி ராய்டு டெஸ்ட் மேட்ச் போல ஆடி 31 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். துவக்க வீரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய ப்ளசிஸ் 45 பந்துகளில் 43 ரன்கள் அடித்திருந்தார். இறுதியில் சென்னை அணி 17.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து கொல்கத்தாவை வென்றது. ஆனாலும் இந்த வெற்றி ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இல்லை என கூறுகின்றனர்.