தொடங்கிய தர்பார் படப்பிடிப்பு.! வெளியான புகைப்படங்கள்.!

திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க., கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும்., திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியை சந்தோஷ் சிவன் மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் முதற்பார்வை நேற்று காலை வெளியான நிலையில்., ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்., நடிகர் ரஜினிகாந்த் நேற்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பானது மும்பையில் இன்று முதல் துவங்கவுள்ள நிலையில்., மும்பை புறப்பட்டு செல்வதற்கு தயாராகி புறப்பட்டு சென்றார். படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று கொண்டு இருக்கும் வேலையில்., இன்று பூஜை போடப்பட்டு வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது.