தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவந்தவர். விவேக் தனது வாழ்வில் நடந்த சோகத்தை திரைப்பட நிகழ்ச்சியில் சொல்லி வருத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இப்படம் முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய விவேக், நான் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பல படங்கள் ஹிட் ஆகியிருக்கின்றன. பல புதுமுகங்களுடன் நான் நடித்த படங்கள், காமெடிக்காகவே ஓடியது.
ஆனால், நான் கதாநாயகனாக நடித்த எந்த படமும் ஹிட் ஆகாதது எனக்கு வருத்தம்தான். நான் கதாநாயகனாக நடித்த ‘நான் தான் பாலா’ மிகப்பெரிய ஹிட் ஆக வேண்டிய படம். ஆனால், அந்த படம் ரிலீஸாகும் போது கமல் சாரின் ‘பாபநாசம்’ படம் ரிலீசானதால் என் படத்தை நாசம் செய்துவிட்டது. அனைத்து தியேட்டரையும் கமல் சாரே எடுத்துக்கிட்டதால என் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை.
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும், தியேட்டர் கிடைத்தால் தானே படத்தை ஓட்ட முடியும் என்றார். ஆனால், இந்த வெள்ளைப்பூக்கள் படம் அந்த குறையை போக்கும் விதத்தில் சிறப்பாக வந்திருக்கிறது என்று கூறினார்.






