வட சென்னையில் 16 வயது மகளின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்,, அவளுக்கு தாலி கட்டிய 28 வயதான நபர் மீது காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
கோபிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. எனவே, என் மகளுக்கு நீதி கிடைக்க கோபி மீது கடும் நடவடிக்கை எடுக்க என புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் அப்பா, வாட்டர் கேன் பிசினஸ் செய்துவருகிறார். இதனால் வாட்டர் கேனை ஆட்டோவில் எடுத்துச் செல்ல சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார் ஆட்டோ டிரைவர் கோபி. இருவரும் நட்பாகப் பழகியுள்ளனர்.
இந்நிலையில் தான் சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று தாலி கட்டி குடும்பம் நடத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அதன்பின்னர், வீட்டுக்கு வந்த சிறுமி தாலியைப் பெற்றோருக்குத் தெரியாமல் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மறைத்து வந்துள்ளார். திடீரென ஒருநாள் சிறுமியின் அம்மா தாலியைப் பார்த்துள்ளார்.
அதன்பின்னர் தான் நடந்த சம்பவம் குறித்து தாய்க்கு தெரியவந்ததையடுத்து, சிறுமியை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். ஏற்கனவே திருமணமான கோபி, எனது மகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டான் என கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் கோபி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






