இதை ஏன் பெருசுபடுத்துறீங்க.. அதிரடியாக சாடிய குஷ்பூ!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் தர்பார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர், பாஜகவின் அறிக்கையில் வெளியிடப்பட்ட நதிகள் இணைப்பு திட்டத்தை வரவேற்பதாக கூறினார். மேலும் அத்தகைய நதிகள் இணைப்பு திட்டத்தால் நாட்டில் உள்ள பாதி பிரச்சனை சரியாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.

இவை சமூகவலைத்தளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.மேலும் ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக பேசுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகையும் காங்கிரஸ் செய்திதொடர்பாளருமான குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் பாஜக அறிக்கையை பற்றி கூறியதை பத்திரிக்கைகள் பெரிய அளவில் பேசி வருகிறது.அவர் நதிகள் இணைப்பு பற்றி பேசியுள்ளார். அதற்கு என்ன? ஒரு குடிமகனாக அவர் அவரது கருத்தை கூறியுள்ளார், ஏன் இதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டும் என குஷ்பூ பதிவிட்டுள்ளார்.