கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை இராணுவப் படைகள் சென்ற வாகனத்தின் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் போர் விமானம் மூலமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், முகாமிட்டிருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை வெடிகுண்டுகள் வீசி தரைமட்டமாக்கியது. இதில் முக்கிய பயங்கரவாத அமைப்பின் முகாம்களும் தகர்க்கப்பட்டன. இது இந்தியர்களுக்கு ஒரு மன நிம்மதியாக இருந்தது.
இந்நிலையில், இந்திய அரசு வரும் 20-ம் தேதிக்குள் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி தெரிவித்ததாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்து உள்ளது. அந்த செய்தி குறிப்பில், ”எங்களுக்கு கிடைத்துள்ள உளவுத்தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள் இன்னொரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாக” பாக்., அமைச்சர் கூறியுள்ளதாக அறிவித்துள்ளது.






