திருமண பந்தத்தில் இணையவுள்ள மஹிந்தவின் மூத்த மகன்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ இந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்திருந்தார்.

இந்நிலையில் மூத்த மகனான நாமல் ராஜபக்ஷவுக்கு திருமணம் செய்து வைக்கும் நடவடிக்கையில் மஹிந்த குடும்பம் ஈடுபட்டுள்ளது.

கம்பஹா பிரதேசத்தின் பிரபல வர்த்தகரின் மகளை நாமல் ராஜபக்ச திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமணத்தின் ஆரம்ப நிகழ்வு ராஜபக்ஷர்களின் சொந்த கிராமமான மெதமுலனையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் தனி நிகழ்வாக நடத்துவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் 10ஆம் திகதியுடன் 33 வயது பூர்த்தியடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.