பல மர்மங்களும், அதிசயங்களும்…

இந்த உலகில் பல மர்மங்களும், அதிசயங்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பல மர்மங்களுக்கான தீர்வு இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத புதிராகவே இருக்கிறது. அப்படி ஓர் மர்மத்தைதான் இன்று நாம் காண இருக்கிறோம்.

மரம் என்றால் நம் நினைவிற்கு வருவது எது? பூ, காய், கனி, நிழல், உயிரினங்களின் வாழிடம் ஆகியவைதான். தன் நிறத்தை, குணத்தை, மணத்தை, வடிவத்தை மாற்றிக்கொள்ளும் பல உயிரினங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அவ்வளவு ஏன் மனிதர்கள் கூட மரத்தில் வீடு கட்டியிருப்பதை பார்த்திருக்கிறோம். ஒரு மரம் எப்படி விலங்குகளாக மாறுகிறது என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

இந்த மரம் தனது வடிவத்தை மாற்றிக்கொள்கிறது. பல விலங்குகளின் உருவங்களை தன்னுள் வைத்திருக்கிறது. இது எவ்வாறு உருவானது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நல்கொண்டா பகுதிக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட ஒரு இடத்தில் அமைந்துள்ள வனம் பலவகையான மரங்களை தன்னுள் கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான் விலங்குகளாக மாறும் இயற்கையாகவே வளர்ந்து உருவான மரம்.

இந்த மரம் தனது வடிவத்தை விலங்குகளாக மாற்றிக் கொள்கிறது என கூறப்படுகிறது. ஆனால், இது மனிதர்களால் செயற்கையாக வடிவமைக்கப்பட்டது என்று கூறுவதற்கான ஆதாரங்கள் ஏதுமே இல்லை.

மரத்தின் சிறப்புகள் :

இம்மரம் பெரிய அளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

பரந்து விரிந்த இம்மரத்தில் அனகோண்டா உருவம் ஒன்று உள்ளது. இந்த உருவம் பார்ப்பதற்கு அப்படியே அனகோண்டா பாம்பு போலவே இருக்கிறது.

இந்த அனகோண்டா வளைந்து வாயைப் பிளந்தவாறு, உண்மையான பாம்பை போலவே தோற்றமளிக்கிறது.

இம்மரத்தின் மற்றொரு பக்கத்தில் முதலையின் உருவம் பதித்தது போன்றும், முதலையின் உடலில் இருக்கும் மேடு பள்ளங்கள் கூட அப்படியே அமைந்திருக்கும் வகையிலும் உள்ளது.

மேலும், இந்த மரம் முழுவதும் கிங்காங் குரங்கு உருவம், சிலந்தி, தேள், பாம்பு, பறவைகள், பூச்சி இனங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் உருவமும் இருப்பதுடன், இவைகள் உயிருடன் இருப்பது போன்றும் தோற்றமளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

அடர்ந்த காடு என்பதால் யாரும் இங்கு இரவு நேரங்களில் செல்வதில்லையாம். ஆனால், இந்த மரம் இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது.

ஏன் இந்த மரம் இவ்வாறு தோற்றமளிக்கிறது என்பது பற்றிய விவரம் இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. இதனால் இந்த மரத்தை மர்ம மரம் என்றும், அமானுஷ்ய மரம் என்றும் பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.