2 மணிநேரம் தீவிர விசாரணை.! திகைத்துப்போன பார் நாகராஜ்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திருநாவுக்கரசின் பண்ணை இல்லம் மற்றும் அவனுடைய இல்லத்தில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் திருநாவுக்கரசின் இல்லத்தில் இருந்த 10 அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவுகள் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்., வழக்கில் புகார் அளித்த பெண்ணின் சகோதரர்களை மிரட்டிய வழக்கில் பார் நாகராஜ் வரும் 28 ம் தேதியன்று கோயம்புத்தூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வந்து விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் வழங்கியிருந்தனர். இதனை ஏற்று நேற்று மாலை 6.30 மணியளவில் ஆஜரான பார் நாகராஜிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நிறைவு பெற்று 8.30 மணியளவில் வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் என்னிடம் இந்த வழக்கு குறித்த கேள்விகளை கேட்டதற்கு நான் பதில் கூறியுள்ளேன்., அவர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் நான் பதில் அளித்துள்ளேன். மேலும்., தற்போது வெளியான பெண்ணின் ஆடியோ குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகள் குறித்தும் என்னால் கூற இயலாது என்று தெரிவித்தார்.