புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு பின் புறத்தில் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் அப்பகுதியை சார்ந்த நடாயி என்ற பெண் மதுபானத்தை வாங்கி அருந்தியுள்ளார்.
மதுவை அருந்தி போதையில் இருந்த இவர்., அவரது ஒன்றரை வயதாகும் குழந்தைக்கும் மதுவை வழங்கியுள்ளார். மதுவின் வீரியத்தால் குழந்தை மதுவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே மயங்கியுள்ளது.
இவரின் செயல்பாடுகளை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு இந்த தகவலை தெரியப்படுத்தினர். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பேருந்து நிலையத்தில் சுற்றியிருந்த பெண்ணை கண்டு அவரிடம் விசாரித்த போது., அவர் மது போதையில் இருப்பதையும் குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதை கண்டும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வைத்த பின்னர்., குழந்தையை குழந்தைகள் உதவி மைய அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் சோகமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.






