நோட்டமிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்! தீட்டப்பட்ட சிறப்பு திட்டம்!

மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளுகான தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக, திருவள்ளூர், தென் சென்னை, காஞ்சீபுரம் (தனி), கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆரணி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம் (தனி), நாகப்பட்டினம் (தனி), மயிலாடுதுறை, மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

இந்த 20 தொகுதிகளில் 5 தொகுதி தனி தொகுதிகளாகும். அதுவும் நான்கு தொகுதி வட தமிழகத்தில் உள்ள தனி தொகுதிகளாகும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சிதம்பரம், நாகப்பட்டினம் தொகுதிகளை அதிமுக போட்டியிட தேர்ந்தெடுத்துள்ளது. பாமக மீது சாதி விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அதுவும் விழுப்புரம் தனி தொகுதியை வாங்கிக்கொண்டது. தங்களுக்கு கிடைத்த முதல் இரண்டு மத்திய அமைச்சர் பதவிகளையும் தலித் உறுப்பினர்களுக்கே பாமக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதே போல திமுக வடக்கே 13 தொகுதிகளை வாங்கி அதில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே தனித்தொகுதியை காஞ்சிபுரத்தை பெற்றுள்ளது. தனித்தொகுதியில் போட்டியிட அப்பரிவு மக்களுக்கு வாய்ப்பை உருவாக்க திமுக தயங்கிய நிலையில், அதிமுக தைரியமாக அந்த தொகுதிகளை வாங்கியுள்ளது. இதனால் தலித் சமுதாய மக்களுக்கு உரிய இடத்தை அதிமுகவில் வழங்கியிருப்பதால் அந்த சாதி மக்கள் அதிமுக கூட்டணியை விரும்புவார்கள் என கருதப்படுகிறது.

மேலும் திமுக சார்பில் 2 பேருக்கு மட்டுமே மகளிருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 10 சதவீதம் தான் என்பதால் 33 சதவீத இட ஒதுக்கீட்டை பேசும் திமுக மீது மகளிர் அமைப்பினர் கடும் கோபத்தில் உள்ளனர். ஆனால் அதிமுக சார்பில் அதிகளவில் பெண்கள் வேட்பாளர் நியமிக்கப்படுவார்கள் என ஓபிஎஸ் கூறியுள்ளது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.