ஸ்டாலினை வச்சு செஞ்ச திருமா., கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்.!

வரும் 17 வது மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில்திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி இணைந்துள்ளது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு தனிச் சின்னம் ஒதுக்கப்படாத காரணத்தினாலும், கழகத்தின் நலன் கருதியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விடுதலை செய்த கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக இறுதி அறிவிப்பு வெளியாகும் கடைசி நிமிடம் வரை, விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரு தொகுதிக்கு தான் வழங்கப்படும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகின. கடைசி நேரத்தில் அறிவிக்கும்போது விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 தொகுதிகள் அளிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே, விடுதலை சிறுத்தை கட்சிய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்ற நிபந்தனை தான் காரணமாக இருக்கும் என்று கருதப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவிக்கையில், ”தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் 11 தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட உள்ளதாகவும், இதில் ஆந்திரா கேரளாவில் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த பதினொரு தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து அவர், தமிழகத்தை பொருத்தவரை சிதம்பரத்தில் விடுதலை கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடவுள்ளதாகவும், விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொருளாளர் ரவிக்குமார் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தான் போட்டியிட உள்ள சிதம்பரம் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்தார். கடந்த இரண்டு 5 தேர்தல்களில் விடுதலை சிறுத்தை கட்சி சிதம்பரம் தொகுதிகள் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் கண்டுள்ளது. இதன் காரணமாக அந்த தொகுதி மக்களை பொருத்தவரை, நான் தனி சின்னத்தில் போட்டியிடுவது அவர்களுக்கு பழகிப் போன ஒன்று, ஆதலால் நான் தனி சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.

அதே சமயத்தில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் நாங்கள், கூட்டணி கட்சியான திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். இதற்கு முக்கிய காரணம், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால், நாங்கள் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்த உள்ளோம். இது ஒரு ராஜ தந்திரம் மட்டுமே வேறு ஏதும் காரணம் கிடையாது என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் தாங்கள் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து திமுகவுடன் கலந்தது ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடந்த பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், 70 வருட பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி கட்சியின் சின்னம் உதயசூரியன். அந்த உதயசூரியன் சின்னத்தில் வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்வோம், இல்லையென்றால் தூக்கி எறிவோம் என்பது போன்ற மனப்போக்கில் திருமா., எடுத்த முடிவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எப்படி ஒத்துக் கொள்ளலாம் என்று திமுக தொண்டர்கள் கொந்தளிப்பில் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இட்டு வருகின்றனர்.

இதுகுறித்து புகார்களும் தலைமைக்கு பரந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு முன் முடிவுகள் மாற்றம் இருக்கலாம் என்றும், விழுப்புரம் தொகுதியில் திருமாவுக்கு தனி சின்னம் தான் கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உதயசூரியன் சின்னத்தில் திருமாவளவன் போட்டியிடாமல் இருப்பதற்கு பல சந்தேகங்களையும் திமுகவினர் எழுப்பியுள்ளனர். எங்களது கூட்டணியில் இருந்துகொண்டு ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில், இன்னொரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவது, நாளை தேர்தலில் வெற்றி பெற்ற பின், கட்சி தாவ வசதியாக இருக்கும் என்பதற்காக திருமாவளவன் இந்த முடிவை எடுத்துள்ளதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் விழுப்புரம் தொகுதியில் பாமக போட்டியிடுவதால் அந்த தொகுதி நமக்கு வெற்றி கிடைக்குமா.. கிடைக்காதா? என்ற காரணத்தினால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் கூட அது உதயசூரியன் சின்னத்திற்கு தான் அவ பெயர் உருவாகும். ஆதலால் அவரை தனி சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தை தனது இராஜதந்திர திற்காக பலிகடா ஆக்குவதா என்றும் திமுகவினர் கொந்தளிப்பில் உள்ளனர்.