உடலிற்கு சத்துக்களை வாரிவழங்க கூடிய வாழைக்காய் வடை, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி உடல் ஆரோக்கியம் பெற உதவும். எவ்வாறு செய்வதென காணலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 1
பன்னீர் துருவல் – அரை கப்
பொட்டுக்கடலை மாவு – கால் கப்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு (நறுக்கவும்)
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
முதலில், வாழைக்காயை நன்றாக வேகவைத்து மசித்து எடுத்து கொள்ளவும்.
பின்னர், இஞ்சி மற்றும் கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
வேகவைத்து மசித்த வாழைக்காயை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில், மிளகாய், பன்னீர், கொத்தமல்லி, இஞ்சி, தழை,உப்பு, பொட்டுக்கடலை மாவு போன்றவற்றை சேர்த்து பிசைந்து எடுத்து கொள்ளவும்.
பின்னர், அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வயதிருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்னர், தட்டையாக்கி காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.