திருவனந்தபுரம் பாலோடு அருகே வேதாங்கோணம் என்ற பகுதியை சேர்ந்த முகமது (32) என்பவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வந்தார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஷிபினா (29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது ஒரு மகன் உள்ளார்.
இவரது மனைவி பெயர் இந்த தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முகமது கட்டிட வேலைக்கு செல்லும் சமயங்களில் கோகுல் என்பவருடன் முகமதுவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரும் கட்டிட தொழிலாளி என்பதால் இருவருக்கும் நல்ல நட்புறவு இருந்தது. இதனால், அடிக்கடி முகமதுவின் வீட்டிற்கு அவர் வந்து செல்லும் வழக்கம் இருந்துள்ளது. பின்னர், ஷிபினாவிற்கு கோகுலுடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் மிக நெருக்கமாக பழக்க ஆரம்பித்தனர். இதனால், முகமது இல்லாத நேரத்தில் அடிக்கடி வந்து போகும் வழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் இது கள்ள காதலாக மாறியது.
திடீரென முகமது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் முகமதுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்று விசாரித்த போது அவரது உடலில் காயம் இருந்தது தெரிய வந்துள்ளது.
அவர் அடித்து கொல்லப்பட்டதை உறுதி செய்த போலீசார், அவரது மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் தனது கள்ளக்காதலன் குறித்தும், அவர்கள் இருவரும் சேர்ந்து அடித்து கொன்றது குறித்தும் உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்பொழுது கொலையாளிகள் இருவரையும், போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.