அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி!

வருகின்ற மக்களவைத் தேர்தலுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரமடைந்து வருகிறது.
அதிமுகவும், திமுகவும் எந்த கட்சியுடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிட்டனர்.

இதன்படி, பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக – பாமக – பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் பாமக – அதிமுக கூட்டணி இறுதியாகி உள்ளது.

பாமக – அதிமுக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 7 பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது. அதேபோல் ராஜ்ய சபா சீட் ஒன்றும் பாமகவிற்கு அளிக்கப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

பாஜகவிற்கு மொத்தம் 5 தொகுதிகள் அதிமுக அணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி என்று அறிவிப்பு வெளியாகும். மேலும், தமாகாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதேபோல, திமுக தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் வரும் 17 வது மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்நிலையில், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, அதிமுக அணியில் புதிய நீதி கட்சிக்கு விரைவில் ஒரு இடம் ஒதுக்கப்படும், அதிமுக சின்னத்தில் நான் போட்டியிடுவேன் என்று கூறினார்.