அதிகாரியின் ஆவேசமான வேண்டுகோள்!

நேற்று பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் என்பவரை கைது செய்த வீடியோவையும் வெளியானது.

இதனையடுத்து, அபிநந்தனை கண்களை மூடி, கைகளை கட்டி ரத்தம் படிந்த முகத்துடன் இழுத்துச்செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்ததால், இந்திய மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தன் பேசியது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேட்கும்போது, என்னால் இதற்கு பதில் அளிக்க முடியும். ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு நான் சொல்ல மாட்டேன். என கூறி தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன் என தெரிவித்தார்.

ராணுவ ரகசியம் என்பது மிகவும் பாதுகாக்கப்படவேண்டியது. ஆனால் சில ஊடங்கங்கள் அபிநந்தனின் வீடு, உறவினர் என அனைவரையும் படம்பிடித்து கட்டிவருகின்றனர். இதனை பார்த்த தமிழக அதிகாரி மீடியாக்களை வாங்கியுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், ராணுவ ரகசியங்கள் பாதுகாக்கவேண்டியது. ஆனால் ஊடங்கங்களின் TRP-யை உயர்த்த அபிநந்தனின் வீடு, உறவினர் என அனைத்தையும் படம் பிடித்து காட்டுகிறீர்கள். அபிநந்தன் பாகிஸ்தானின் பிடியில் இருந்தும், அவர்கள் கேட்கும் முக்கிய கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூற மறுக்கிறார். ஆனால் அந்த ராணுவ ரகசியங்களை மீடியவாகிய நீங்கள் போட்டு உடைக்கிறீர்கள் என ஆவேசத்துடன் பேசியுள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.