மத்திய உள்துறை அமைச்சர் திடீர் ஆலோசனை.!

கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை இராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தது. மேலும், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முகாம்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது.

இந்திய விமான படை நடத்திய இந்த பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்களை பாலி கொடுத்து இந்திய பழி தீர்த்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்பதால் இந்திய எல்லைகளில் உள்ள நமது இராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் பதில் தாக்குதலுக்கு பின், இந்திய பிரதமர் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட்டார். அதேபோல் பாகிஸதான் பிரதமரும் அவசர ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே இந்திய நடத்திய பதில் தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று அறிவித்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை, ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இரண்டு பேரை சூடு கொன்றுள்ளனர். மீமந்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்திய இராணுவம் தேடுதல் வேட்டையில் இறங்கியது.

அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதிலுக்கு நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, போர் இந்திய-பாக்., போர் ஏற்படாமல் இருக்க ஐநா., பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக, இன்று காலை டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை முப்படை தளபதிகள் சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.