விபத்தில் கால்களை இழந்த நாய்க்குட்டி.! மனமுருகி நடமாடவைத்த சிவில் என்ஜினியர்.!

புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் தெரு நை ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குட்டிகளை ஈன்றெடுத்து. அந்த நை குட்டிகள் கண்விழித்த பின்னர் அந்த சாலையில் சுற்றி திறந்து வந்தது. இந்நிலையில்., அந்த நாய் குட்டியில் இருந்த நாய் ஒன்று., சாலையில் சென்ற போது வாகனம் மோதி நடக்க முடியாமல் சாலையோரத்தில் முடங்கியது., இதன் அழுகை சத்தம் கேட்டும் யாரும் உதவி செய்வதற்கு முன்வரவில்லை.

இதனையடுத்து அந்த பகுதி வழியாக சென்ற அமைப்பியல் (சிவில்) பொறியாளர் அசோக் குமார்., நாயின் வலியை புரிந்துகொண்டு கால்நடை மருத்துவர்களிடம் நாய்க்குட்டியை கொண்டு சென்றுள்ளார். மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில் நாய்க்குட்டி உயிர் பிழைத்திருந்தாலும்., தனது கால்களை இழந்து குழந்தையை போலவே தவழ்ந்து வந்தது. இதனை கண்டு மனவேதனையடைந்த பொறியாளருக்கு யோசனை ஒன்று தோன்றியுள்ளது.

அதன் படி., நாயின் இரண்டு கால்கள் நலமாக இருக்கிறது., அதனை வைத்து பின்னால் சக்கரம் போன்று சிறு அமைப்பை தயார் செய்தால் அதனால் நடக்க இயலும் என்று பிறந்த யோசனையின் மூலமாக., எடை குறைவான பிளாஸ்டிக் குழாய்களின் மூலமாக வண்டியை உருவாக்கி பழைய சக்கரங்களை அந்த வண்டியின் அடியில் பொறுத்தியுள்ளார்.

அந்த வண்டியை நாய் தனது இரண்டு கால்களின் மூலமாக இயக்கும் வகையில்., நாயின் உடலில் பொருத்திவிட்டு சோதனை செய்த போது., பிற நாய்களை போல செயல்படமுடியவில்லை என்றாலும்., சிறிய முயற்சியால் முடங்கி கிடந்த நாய் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வருகிறது என்று மனதை தேற்றிக்கொண்டார். இந்த விஷயம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது உள்ள காலத்தில் மனிதாபிமானம் குறைந்து விட்டது என்று அனைவரும் கூறி வரும் வேலையில்., நாம் செய்யும் சிறு சிறு உதவிகளை வைத்து மனிதாபிமானம் என்பது இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். அனைவருக்கும் மனது உள்ளது., அவர்களிடம் குணம் உள்ளது. அவர்களின் குணத்தை அவர்கள் செய்யும் சில விஷயங்களை வைத்தே குழந்தை மனதை கண்டறிய இயலும். நாய்க்கு உதவி செய்த தோழருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..