இந்தியாவில் அண்ணனுக்கும், தங்கைக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தாலிக்கட்டும் நேரத்தில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் கர்ணா (28) இவருக்கு நேற்று இளம் பெண் ஒருவருடன் திருமணம் நடக்கவிருந்தது.
அதே சமயத்தில் ரஞ்சித்தின் வருங்கால மனைவியின் அண்ணணுக்கு ரஞ்சித்தின் தங்கையை திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இரண்டு திருமணமும் ஒரே நேரத்தில் நடக்க ஏற்பாடுகள் நடந்தன.
தாலிக்கட்ட 15 நிமிடங்களே இருந்த நிலையில் அருகில் சென்று வருவதாக கூறி ரஞ்சித் எழுந்து சென்றார்.
ஆனால் முகூர்த்த நேரம் தாண்டியும் அவர் வராததால் உறவினர்கள் ரஞ்சித்தை தேடி சென்றனர்.
அப்போது அங்கிருந்த குளத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியபடி ரஞ்சித் இருந்தார். இதைபார்த்து மணமகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ரஞ்சித் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என இன்னும் பொலிசாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏனெனில் திருமண வேலையை மகிழ்ச்சியாகவே அவர் செய்துள்ளார்.
இதனிடையில் ரஞ்சித்தின் இறுதிச்சடங்கு நடைபெற்ற பின்னர், அவரின் தங்கை திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நபருடன் எளிமையாக நடைபெற்றது.