எனது செல்ல மகளை கொன்றுவிட்டான்., தாயாரின் கண்ணீர் பதில்.!!

கடலூர் மாவட்டத்தில் இருக்கும் குறிச்சிபாடியில் இருக்கும் தனியார் பள்ளியின் வளாகத்தில் ஆசிரியை ரம்யா என்பவரை., ராஜசேகர் என்பவர் கொடூர முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்., இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விஷயம் குறித்து ரம்யாவின் தாயார் வள்ளியிடம் கேட்ட போது அவர் தெரிவித்தாவது.,

ரம்யா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக கடலூரில் இருக்கும் கல்லூரியில் பயின்று வந்தார். அந்த சமயத்தில் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வருவது வழக்கம். அந்த நேரத்தில்., விருத்தகிரிகுப்பதை சார்ந்த வாலிபரான ராஜசேகர் என்பவனும் சென்று வந்துள்ளார்.

பேருந்தில் பயணம் செய்யும் நேரத்தில் அடிக்கடி ரம்யாவிடம் பேசி கொண்டு வந்த இவன், ரம்யாவை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இதனை கண்டுகொள்ளாமல் ரம்யா இருக்கவே., ஒரு நாள் அவரின் அலைபேசியை பறித்துக்கொண்டு சென்றுள்ளான்.

அவரின் அலைபேசி குறித்து ரம்யாவிடம் கேட்ட போது., தோழியிடம் கொடுத்ததாக கூறினார். இது குறித்து அவரது தோழியிடம் கேட்ட போது., ரம்யா அலைபேசி ஏதும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில்., சில மாதங்களுக்கு முன்னதாக பெண் கேட்டு எங்களது இல்லத்திற்கு ராஜசேகர் வந்தான்.

நாங்கள் பெண் வழங்க மறுத்ததை அடுத்து ரம்யா மற்றும் அவரது தங்கையை கொலை செய்து விடுவதாக மிரட்டினான். இதனை பெரிதாக நாங்கள் எடுத்துக்கொள்ள வில்லை., பின்னர் பள்ளிக்கு பணிக்கு சென்று வருவதற்காக அவருக்கு அலைபேசி ஒன்றை வாங்கி வழங்கினோம்.

இந்த அலைபேசி எண்ணை அறிந்துகொண்ட பாவி ராஜசேகர் திருமணம் செய்து கொள் என்று குறுஞ்செய்தி வாயிலாகவும்., எங்களது உறவினர்களிடம் தெரிவித்து வந்துள்ளான். மேலும்., திருமணம் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளான்.

இந்நிலையில்., பள்ளிக்கு பணிக்கு சென்ற எனது மகளை பின் தொடர்ந்து பள்ளியின் வளாகத்திலேயே கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான்., எனது செல்ல மகளின் வாழ்க்கையை சீரழித்து எங்களை மீள துயரில் ஆழ்த்திவிட்டான்., அவன் நல்லாவே இருக்கமாட்டான் என்று தெரிவித்தார்.