வெளிநாட்டு பெண்ணை காதலித்த தமிழர்: இறுதியில் என்ன ஆனது??

வெளிநாட்டு பெண்ணை தமிழகத்தை சேர்ந்த இளைஞர் உயிருக்கு உயிராக காதலித்த நிலையில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் கம்பத்தை சேர்ந்தவர் மருது சக்கரவர்த்தி. இவர் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

மருது பணிபுரியும் அதே நிறுவனத்தில் அயர்லாந்தை சேர்ந்த அனெட் என்ற பெண்ணும் பணிபுரிந்தார்.

இந்நிலையில் மருதுவுக்கும், அனெட்டுக்கும் காதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் உயிராக நேசித்தனர்.

இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிந்த நிலையில் அவர்கள் பச்சைக்கொடி காட்டினார்கள்.

இதையடுத்து தமிழ் கலாச்சாரப்படி கம்பத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இருவருக்கும் திருமணம் நடந்தது. இதில் மணப்பெண்ணின் பெற்றோர் பேட்ரிக்மெகர்- தெரசாமெகர் உள்ளிட்ட அயர்லாந்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.