தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் கும்பக்கோணத்தை அடுத்துள்ள கொரநாட்டு கருப்பூரை சார்ந்தவர் காமராஜ். இவரது மகனின் பெயர் சதிஷ் (26). சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.
அதே பகுதியை சார்ந்தவரின் பெயர் ரவி. இவரது மகளின் பெயர் சுப்பசக்தி (வயது 24). இவர் பி.டெக் பயின்றுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்., இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனையடுத்து இல்லத்திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தால்., சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்த சுபசக்தியின் தாயரிடம் சென்று பதிவு திருமணம் செய்ய அனுமதி வாங்கியுள்ளார்.
பின்னர் இருவீட்டாரும் பேசி எப்படியோ திருமணத்திற்கான அனுமதியை பெற்றவுடன்., இருவருக்கும் திருநாகேஸ்வரத்தில் இருக்கும் ஒப்பிளியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில்., 19 ம் தேதிக்கு மண்டபத்திற்கு வர வேண்டிய மண பெண் வரவில்லை என்பதை அறிந்து சதீஷ் அதிர்ச்சியாகியுள்ளார்.
அந்த நேரத்தில் சதீஷுக்கு தொடர்பு கொண்ட சுபசக்தி தன்னை தந்தை அடைத்து வைத்து., திருமணத்திற்கு திடீரென மறுப்பு தெரிவித்ததாகவும்., திருமணம் நடைபெறவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சதிஷ் சுபசக்தியின் தந்தைக்கு தொடர்பு கொண்ட போது வரதட்சணை மற்றும் பணம் கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சதீஷ் புகார் அளித்துள்ளார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






