இம்ரான் கான் அதிரடி உத்தரவு… இது மட்டும் நடந்தால் இந்தியாவை திரும்ப தாக்குங்கள்!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலாக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்குமாறு இராணுவ வீரர்களுக்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.

புல்வாமாவில் கடந்த 14ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 44 வீரர்கள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு ஆதரவு பெருகியது.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான்கான் தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு பின்னர் வெளியான அறிக்கையில், பாகிஸ்தான் மக்களை பாதுகாக்கும் வலிமையும், திறனும் அரசுக்கு இருக்கிறது.

புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. ஆக்கிரமிப்பு நோக்கத்திலோ அல்லது வேறு விபரீத எண்ணத்திலோ இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுத்து திரும்ப தாக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு கட்டளையிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.