சிக்கன் – 250 கிராம்
மைதா – 3 டீஸ்பூன்
பூண்டு – 1
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தக்காளி சாஸ் – சிறிது
கார்ன் பிளவர் – 2 டீஸ்பூன்
முட்டை – 1
காய்ந்த மிளகாய் – 50 கிராம்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
தக்காளி – 1
செய்முறை :
முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
பின்பு காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
மேலும் வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, பூண்டை ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு அதனுடன் மைதா, உப்பு, கார்ன் பிளவர், முட்டை (பாதி) சற்று நீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.
அடுத்து வெங்காயம், தக்காளி, கேப்சிகம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அரைத்த காய்ந்த மிளகாய், தக்காளி சாஸ் சேர்க்கவும்.
கொஞ்சமாக கார்ன் பிளவர் கரைத்து வாணலியில் ஊற்றவும்.
கடைசியாக பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் போட்டு வறுத்து எடுக்கவும். பின்பு சுவையான செஸ்வான் சிக்கன் ரெடியாகிவிடும்.







