விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பாத்திமா லே-அவுட் ஜால்னா பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவருடைய மனைவியின் பெயர் வைஷ்ணவி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2010 ம் வருடத்தில் திருமணம் நடைபெற்றது.
தற்போது இவர்கள் இருவருக்கும் யோகேஷ் என்ற நான்கு வயதுடைய மகன் இருக்கிறார். அதே பகுதியை சார்ந்தவர் குரு. இவர்கள் இருவரும் நகை செய்யும் தொழில் செய்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் மூலமாக குரு தனது நண்பரான மணிகண்டனின் இல்லத்திற்கு வந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில்., குருவிற்கும் – மணிகண்டனின் மனைவி வைஷ்ணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளத
இந்த பழக்கத்தை சில நாட்கள் தொடர்ந்து கொண்டு வந்த நிலையில்., குரு திடீரென வைஷ்ணவியை திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் திருமண பந்தத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில்., திருமணத்திற்கு தடையாக மணிகண்டன் தடையாக இருப்பதாக கூறி அவரை கொலை செய்ய தயாராகியுள்ளார். அதன் படி., கடந்த பிப் 9 ம் தேதியன்று மணிகண்டனின் இல்லத்தில் வைத்து மது அருந்தும் சமயத்தில் மதுவில் அமைதியாக விஷத்தை கலந்து வழங்கிவிட்டு வெளியேறியுள்ளார்.
இதனை அறியாத மணிகண்டன் மதுவை அருந்தவே., சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே வீழ்ந்தார். அந்த நேரத்தில்., வைஷ்ணவி வெளியே வரவே., கணவர் வீழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த நேரத்தில்., எந்த விதமான சலனமும் இல்லாமல் வந்த குரு., அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று நம்பவைத்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வைஷ்ணவியை அடிக்கடி குரு சென்று சந்தித்து வந்ததை அடுத்து., இதனை கண்ட மணிகண்டனின் அண்ணன் சந்தேகமடைந்து வைஷ்ணவியின் வாட்சப் உரையாடலை கண்ட போது குருவுடன் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலயத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






