யாழ்ப்பாணம் கோப்பாயில் அதிரடி சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணத்திலும், கோப்பாயிலும் சுமார் 150 காவல்துறையினர் ஊடாக விசேட தேடுதல் நடவடிக்கை நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

குறித்த தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சில சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், கொக்குவில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 4 சந்தேகத்துக்குரியவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், அவர்களிடமிருந்து நான்கு உந்துருளிகளும், 3 வாள்கள் உள்ளிட்ட சில ஆயுதங்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.