மாற்றி மாற்றி கருத்து சொல்லி மாட்டிக்கொண்ட மதிமாறன்!!

ஏற்கனவே, சாதிரீதியாக உணவுகளை பிரித்து சர்ச்சையைக் கிளப்பிய திராவிட கழகத்தைச் சார்ந்த மதிமாறன், மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பிரச்சனையை கிளப்பியுள்ளார்.

முன்னதாக தோசைகளை சாதி ரீதியாக பிரித்து இது உயர்சாதி தோசை இது தாழ்த்தப்பட்ட சமூக தோசை என்றும், அரிசியிலும் சாதியை பிரித்து பிறரின் கேளிக்கு ஆளான மதிமாறன், பின் கை கழுவும் இடங்களில், ‘வெஜிடேரியன்கள் மட்டும் கைகழுவவும்’ எனக் குறிப்பிட்டு பலரிடம் வாங்கி கட்டி கொண்டார்.

இந்நிலையில், கடந்த 19 ம் தேதி தனது ட்வீட்டர் பக்கத்தில், “திரு.ஸ்டாலின் கலைஞரை விட சிறப்பாக கையாள்கிறார் தேர்தல் கூட்டணியையும் ரஜினி, கமலையும்.” என கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து, நேற்று, ” 10 ரொம்ப அதிகம். 10 சதவீத இட ஒதுக்கீடு போல்.” என நேற்று பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் கலைஞரை விட சிறப்பாக செயல்படுகிறார் என கூறிவிட்டு தற்பொழுது அவரது முடிவுகளை சரியில்லை என மதிமாறன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, அவரது ட்வீட்டர் பாலோவர் ஒருவர் அவரை நேரடியாக தாக்கி கேள்வி கேட்டுள்ளார்!! ஆனால், இதற்கு பதில் கூறமுடியாமல் மதிமாறன் பதுங்கி இருப்பதாக தெரிகிறது.