இலங்கையில் உள்ள மன்னார் நானாட்டான் பகுதிக்கு அருகில் இருக்கும் சாளம்பன் பகுதியில் 91 வயதுடைய மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மட்டும் தனிமையில் வசித்து வரும் நிலையில்., சுமார் 25 ம் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்த ஆடுகளை அங்குள்ள பகுதிகளில் மேய்த்து வளர்த்து வந்தார். காலையில் ஆடுகளை மேய்க்க துவங்கிவிட்டு மதிய நேரத்தில்., உணவு சாப்பிட இல்லத்திற்கு வந்து மீண்டும் ஆடுகள் இருக்கும் இடத்திற்கு செல்லும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளார்.
அதே போன்று., நேற்று நொச்சிக்குப்பம் அருகே ஆடுகளை மேய்க்க கூட்டி சென்று ஆடுகளை மேய்க்க துவங்கினார். மதிய நேரம் வந்ததும் வழக்கம் போல ஆடுகள் அனைத்தும் மேய்ந்து கொண்டு இருக்கின்றது என்று., மதிய உணவிற்கு இல்லத்திற்கு சென்றுள்ளார்.
மதிய உணவை சாப்பிட்டுவிட்டு பின்னர் ஆடுகள் இருக்கும் இடத்திற்கு சென்ற படாது ஆட்டுக்கல் அனைத்தும் காணவில்லை., ஆடுகளை தேடி அலைந்த பின்னர் சுமார் ஆறு ஆடுகள் மற்றும் கிடைத்துள்ளன.
மறுநாள் தேடியும் ஆடுகளை காணவில்லை என்பதால்., விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியாக வாழ்ந்து வரும் மூதாட்டி., ஆடுகளை மேய்த்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த சமயத்தில்., ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








