கடனை கேட்டதற்கு ஆபாச புகைப்படத்தை அனுப்பிய பெண்.! திகைத்துப்போன சோகம்.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மண்டபத்தில் உள்ள பகுதியை சார்ந்தவர் பழனிவாசகம். அதே பகுதியை சார்ந்த பெண்மணி ப்ரீத்தி.

இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நன்றாக பழகி வந்த நிலையில்., தனக்கு பண உதவி செய்யக்கூறி ப்ரீத்தி பழனிவாசகத்திடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு பண உதவி வழங்க முன்வந்த பழனி ரூ.இரண்டரை இலட்சம் வழங்கியுள்ளார். பணத்தை பெற்று கொண்ட ப்ரீத்தி நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை வழங்க மறுத்துள்ளார்.

மேலும்., பணத்தை கேட்கும் சமயத்தில் இப்போது தருகிறேன்., பிறகு தருகிறேன் என்று கூறி கொண்டே வந்துள்ளார். இந்நிலையில்., வழக்கம் போல பணத்தை திரும்ப தரக்கூறி கேட்டுள்ளார்.

இதனையடுத்து பழனியின் வாட்சப் எண்ணிற்கு ப்ரீத்தி ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்., காவல் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர்., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.