தமிழகத்தை பொருத்தவரையில் அரிசி இன்றியமையாத உணவாகும். தினமும் சமைக்க பயன்படும் இந்த அரிசியை கழுவும் சமயத்தில் கிடைக்கும் நீரை அனைவரும் கீழே ஊற்றுவது வழக்கம். ஆனால், அந்த கழுவிய நீரில் அதிகப்படியான வைட்டமின்ஸ், மினரல் மற்றும் அமினோ ஆசிட் போன்றவை நிறைந்துள்ளது. இதனை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்துவதன் மூலமாக பலன் பெறலாம்.
அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இதனை பயன்படுத்தி முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் பருக்கள் பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
சிறிய அளவிலான காட்டன் துணியை பயன்படுத்தி., அரிசி கழுவிய நீரில் முக்கியெடுத்து முகத்தை துடைக்கலாம். முகத்தை கழுவக் கூடாது. முகம் தானாகவே காய்ந்துவிடும் என்பதால்., நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக முகத்திற்கு சென்றடைந்து முகத்திற்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
மேலும், இளவயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
சீனாவில் உள்ள ஓர் ஊரில் பெண்கள் அனைவருக்கும் மிக நீளமான தலை முடியானது இருக்கும். அதற்கு காரணம் என்ன என்று அப்பெண்களிடம் கேட்ட போது., தினமும் அரிசி கழுவிய நீரில் தலைக்கு குளிப்பது என்பது தெரியவந்தது.
சீயக்காய், ஷாம்பு என எதை பயன்படுத்தினாலும் இறுதியாக அரிசி கழுவிய நீரை தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளை குளிப்பாட்டும் போது அரிசி கழுவிய நீருடன் சிறிது சாதாரண நீரை சேர்த்து குளிக்க வைத்தால் சரும நோய்கள் வராமல் தடுக்கும்.






