பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே., அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு உண்பதன் காரணமாக உடலுக்கு நல்லது.
மேலும் குழந்தைகளுக்கு அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்குவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்களை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் பலவிதமான பழங்களை உண்பது நல்லது என்றாலும்., சில பழங்களை சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல., அதற்கான பதிவாக இந்த செய்தி வழங்கப்படுகிறது.
மேலும் இரண்டு பழங்களையும் ஒன்றாகத்தான் உண்ணக்கூடாது என்று கூறியுள்ளீர்கள்.. ஆகையால் சில மணி நேர இடைவெளிக்கு பின்னர் சாப்பிடலாமா? என்று கேட்க கூடாது. அந்த வகையில் சந்தேகம் உள்ளவர்கள் மருத்துவரை அணுகவும்.
பப்பாளி பழம் மற்றும் எலுமிச்சை பழம்:
எலுமிச்சை பழம் மற்றும் பப்பாளி பலத்தை ஒன்றாக சாப்பிடும் போது இரத்த சோகை மற்றும் இரத்த ஹீமோகுளோபின் சமசீரின்மை உண்டாகி அதன் மூலம் உடல் நலத்திற்கு சில பாதிப்புகள் ஏற்படுகிறது.
ஆரஞ்சு பழம் மற்றும் பால்:
ஆரஞ்சு பழம் மற்றும் பால் பொருளை ஒன்றாக உண்பதன் காரணமாக நமது செரிமானமானது கடினமாகிறது. மேலும்., உடலுக்கு தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதன் மூலம் அஜீரண கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு மற்றும் பால் பொருட்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கொய்யா பழம் மற்றும் வாழைப்பழம்:
வாழைப்பழம் மற்றும் கொய்யாப்பழத்தை சேர்த்து உட்கொண்டால் அமிலத்தினால் உடலுக்கு ஏற்படும் அமில நோய்., வாந்தி ஏற்படுவது போல குமட்டல்., வாயு தொந்தரவு மற்றும் தொடர் தலைவலி போன்ற நோய்களால் அவதியுற வேண்டியிருக்கும்.