இலங்கையில் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!

இந்த வருடம் முதலாம் தரத்திற்காக புதிதாக மாணவர்கள் இணையாத 350 பாடசாலைகள் நாட்டில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாட்டில் பல பாடசாலைகளை மூடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி சேவை கல்வியமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியை தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற செயற்திட்டம அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.