பிரித்தானிய மன்னராக விருப்பமில்லை எனக்கூறிய வில்லியம்: ஹரி கொடுத்த அதிர்ச்சி பதில்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனக்கு மன்னராக விருப்பமில்லை என அவருடைய தாய் டயானாவிடம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசியிருக்கும் பிரபல பத்திரிக்கையாளர் மைக்கேல் பேக்ஸ்மன், பிரித்தானிய இளவரசி டயானா இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னாக தன்னை மதிய விருந்திற்கு அழைத்ததாக கூறியிருக்கிறார்.

1996ம் ஆண்டு டயானாவின் செயலாளர் எனக்கு போன் செய்து அரண்மனைக்கு வர அழைப்பு விடுத்தார். எனக்கு ஏன் என்று தெரியவில்லை. நீங்கள் கற்பனை செய்வதை போலவே அவர் மிகவும் கவர்ச்சியாக அழகாக இருந்தார்.

அப்போது அவருடைய குழந்தைகள் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இளவரசர் வில்லியம் ஒரு முறை, அம்மா எனக்கு மன்னராக விருப்பபமில்லை எனக்கூறியுள்ளார்.

அதனை கேட்ட ஹரி உடனடியாக, உனக்கு அதில் விருப்பமில்லை என்றால், அது எனக்கு வேண்டும் என கூறியதாக இளவரசி என்னிடம் கூறினார்.

அவள் அழகாக தனிமையில் இருப்பதை போல நான் உணர்ந்தேன். நான் அங்கிருந்து கிளம்பியபோது, என்ன இந்த இடம் மிகவும் வித்யாசமாக, அமைதியாக பார்ப்பதற்கு சிறை போல இருக்கிறது என கேட்டேன்.

அதற்கு டயனா, இது ஒரு சிறை போன்று அல்ல. அதை விட அதிக சிரமங்களை அனுபவிக்கும் Coronation தெருவை போன்றது என கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவருடைய கருத்துக்களுக்கு அரண்மனை நிர்வாகம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.