புதுமணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு: அதிர்ந்த மணமகன்

ஐக்கிய அமீரகத்தின் குவைத் நாட்டில் திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் புதுமணப்பெண் விவாகரத்து கோரிய சம்பவம் அவரது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சட்டப்படி நீதிமன்றத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்துவிட்டு கணவருடன் திரும்பும் வழியில் தம்மை அவமானப் படுத்தியதாக கூறி, உடனையே விவாகரத்துக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்றத்தில் இருந்து கணவருடன் வெளியே செல்லவே மணப்பெண்ணின் கால் இடறியதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டு மணமகன் கிண்டல் செய்யவும், புத்திசுவாதீனம் இல்லையா என கேட்டு அவமானப்படுத்தியதாகவும் மணப்பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இழிவான வார்த்தைகளால் தம்மை அவமதித்ததாக கூறிய மணப்பெண் உடனடியாக நீதிமன்றத்திற்கு உள்ளே நுழைந்து உரிய அதிகாரிகளிடம் விவாகரத்துக்கு மனு அளித்துள்ளார்.

மட்டுமின்றி மண்ப்பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி, உடனையே அவருக்கு விவாகரத்தும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்க்கவே, பெரும்பாலானோர் அந்த மணப்பெண்ணின் முடிவை ஆதரித்ததுடன்,

வாழ்க்கையின் துவக்கத்திலேயே கணவரின் நடவடிக்கை இதுவென்றால், உண்மையில் மணப்பெண்ணின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளனர்.