கதறிய இளம் மனைவி..? நாலு பேர் சேர்ந்து செய்ததாக ஆட்டம் காட்டிய கணவன்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிகறம்பக்குடி அருகே சூரக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் மகாலட்சுமி.

இவர், அப்பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணித்தளப்பொறுப்பாளராக பணிபுரிந்தார். அதே ஊரை சேர்ந்தவர் எம்.மோகன்.

இவர், நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் இரால் பண்ணையில் பணிபுரிந்தார். உறவினர்களான மகாலட்சுமி, மோகன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையன்று இரவு மகாலட்சுமி வீட்டின் அருகே தைலமரக்காட்டில் இருவரும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகாராறில் மோகன் கட்டையால் தாக்கியதில் மகாலட்சுமி படுகாயம் அடைந்து அந்த இடத்திலேயே இறந்தார்.

அலரல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினரிடம் தங்களை மர்ம நபர்கள் 4 பேர் வந்து தாக்கியதாக கூறி நாடகமாடியுள்ளார்.

பின்னர், மோகனிடம் கறம்பக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மகாலட்சுமியை மோகன் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மோகனை வெள்ளிக்கிழமையன்று கைது செய்தனர்.