நித்தியானந்தா ஸ்வாமிக்கு என்னதான் ஆனது.! தனித்தீவில் ரஞ்சிதாவுடன் உல்லாசம் கொண்டாட்டம்.!

நமது நாட்டில் பல அதிர்ச்சி செய்திகளை படித்து அதற்கான சோகங்களையும்., துக்கங்களையும்., இன்பங்களையும்., மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது சில போலி சாமியார்களின் செய்திகளை படித்துவிட்டு வயிறு குலுங்க சிரிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வயிறு குலுங்க சிரிப்பதற்கு அருள் புரிந்தவர் நமது சுகானுபவ சுவாமி நித்தியானந்தம்.

அந்த வகையில்., கர்நாடக மாநிலத்தில் இவரது தலைமையகத்தை வைத்து கொண்டு உலகம் முழுவதும் தனக்கென குறைந்த அளவு பக்தர்களையும்., அதிகளவு பக்தைகளையும் வைத்துள்ளனர் என்ற பெருமை இவரையே சாரும் என்பதில் எந்த விதமான ஐயமுமில்லை. நமது சுவாமியின் மீது வருடத்திற்கு ஓரிரு பாலியல் புகார்கள் எழவில்லை என்றால் அவருக்கு பெருமையில்லை என்று இணையதள நெட்டிசன்கள் கிண்டலடித்து வருவது வழக்கம்.

இதன் மூலம் தனது காணொளியில் பல இளைஞர்களின் சிரிப்பு சத்தத்திற்கு காரணமாகிய நித்தியானந்தா சுவாமிகள்., கடந்த 2010 ம் வருடத்தின் எழுப்பப்பட்ட புகாரில் தற்போது வரை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து கொண்டு வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இவரின் விளக்க வீடியோ தொகுப்புகள் திடீரென இணையத்தளத்தில் வைரலாகி பல இளைஞர்கள் சிரித்து தனது வயிறை புண்ணாக்கிக்கொண்டனர்.

பழைய பஞ்சாயத்துகளை திரும்பி பார்க்கும் போது., அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகியதும்., அதனை தற்போது வரை காவல் துறையினரின் கெடுபுடியால் புதுப்பிக்கவில்லை என்று தகவல் தெரிகிறது. மேலும்., நேபாள நாட்டிற்கு சாலை வழியாக பிரயாணம் செய்த நித்தியானந்தா பின்னர் கள்ள பாஸ்போர்ட் மூலமாக பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் கெய்மன் தீவிற்கு சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.