தொலைபேசி மூலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற பாஜக தீர்மானித்துள்ளது.

அம்மாநிலத்தை பாஜக தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் குறிவைத்து கடுமையான பிரசார கூட்டங்களை நடத்துகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, இன்று தெற்கு தினார் மாவட்டத்தில் பாஜக பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இங்கு ஹெலிகாப்டரை தரையிறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. முதலமைச்சரின் பேச்சை கேட்க இன்று பெரும் திரளான கூட்டம் கூடி காத்திருக்க துவங்கி விட்டனர்.

பின்னர், ஹெலிபேட் இல்லாததால் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து தொலைபேசி மூலம் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.