இங்கிலாந்தில் சடலத்துடன் பாலியல் உறவு வைத்திருந்த இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பர்மிங்காம் பகுதியை சேர்ந்த காசிம் குராம் என்கிற 23 வயது இளைஞர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதியன்று போதையில், Great Barr பகுதியில் செயல்பட்டு வரும் பிணவறை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அதன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற காசிம், குழந்தையின் சடலம் உட்பட 9 சடலங்களை வெளியில் எடுத்து நெருக்கமாக இருந்துள்ளார்.
இது சம்மந்தமாக கைது செய்யப்பட்ட காசிம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, எல்லா மனித உணர்ச்சிகளையும் நீங்கள் புண்படுத்திவிட்டீர்கள் என குற்றவாளியிடம் கடிந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.






