அவுஸ்திரேலிய விமானநிலையத்தில் நீ என்னை ஏமாற்றியது எனக்கு தெரியும் என்று எழுதியிருக்கும் அட்டை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு காதலன் நின்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமானநிலையத்தில் தங்களது உறவினர்களை வரவேற்பதாக பலரும் அங்கு காத்துக் கொண்டிருந்தனர்.
பொதுவாக விமானநிலையத்தில் தெரியாத நபர்கள் வந்தால், கையில் அவர்களின் பெயர்களை அட்டை ஒன்றில் எழுதி, அதை கையில் தூக்கி பிடிப்பர்.
அதன் பின் விமானநிலையத்தில் வந்திறங்கும் நபர், அந்த அட்டையில் இருக்கும் பெயரைக் பார்த்து அடையாளம் கண்டு கொள்வர்.
அப்படி தான் இந்த விமானநிலையத்திற்கு வந்த இளைஞன், தன் கையில் வைத்திருந்த அட்டையில், நீ என்னை ஏமாற்றியது தெரியும்(காதலி) என்று எழுதி கையில் பிடித்து நின்று கொண்டிருந்துள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த பயணிகளில் சிலர் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் இந்த சம்பவத்தை நேரில் கண்ட இணையவாசி ஒருவர் நான் இன்று விமானநிலையத்திற்கு சென்ற போது கண்ட சம்பவம் தான் இது என்று புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இப்புகைப்பட தற்போது வரை சமூகவலைத்தளங்களில் 75,000-க்கும் மேற்பட்ட லைக்குகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.