பிறந்த குழந்தையை கொலை செய்து பொம்மைக்குள் அடைத்து வைத்த தாய்!

சுவிற்சர்லாந்தில் பிறந்ததும் பிஞ்சுக்குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த தாய்க்கு, 1 ஆண்டு மட்டுமே சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தை சேர்ந்த 23 வயதான ஜெசிகா என்கிற தாய் கடந்த 2015ம் ஆண்டு கர்ப்பமாக இருந்துள்ளார்.

கர்ப்பத்தை கலைக்குமாறு வற்புறுத்தியும், ஜெசிகா மறுப்பு தெரிவித்ததால் அவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

ஜெசிகா 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இளம்பெண்ணாக இருந்த ஜெசிகாவிற்கு குழந்தை பிறப்பதை பற்றிய எந்த தெளிவும் இல்லாததால், வேகமாக சென்று கழிவறையில் உள்ள பாத்டப்பில் அமர்ந்துள்ளார்.

அப்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை சுவற்றில் அடித்து, எலும்புகள் உடையும் அளவிற்கு கொடூரமாக கொலை செய்த ஜெசிகா, உடலை ஒரு கரடி பொம்மையில் வைத்து மறைத்துள்ளார்.

அடுத்த 31 மணி நேரம் கழித்து மீண்டு ஜெசிக்காவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது இறந்து நிலையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதேசமயம் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ஜெசிகா மயங்கியபடியே கழிவறையில் கிடந்தார்.

இதனையடுத்து மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், முதல் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்து ஜெசிகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும் பொழுது, ‘குற்றம் சாட்டப்பட்ட ஜெசிகாவிற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒரு பக்கம் அவள் அப்பாவியாகத் தோன்றுகிறாள். மறுபக்கம் கடுமையானவளாக இருக்கிறாள் என வழக்கறிஞர் கூறினார்.

இதனை விசாரித்த பெண் நீதிபதி, பிரசவத்தின் போது ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக ஜெசிகா இப்படி நடந்திருக்கலாம் எனக்கூறி 12 மாதங்கள் மட்டும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.