பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய மனைவியுடன் குழந்தை பிறப்பதற்கு முன்னே அரண்மனையை வெளியேற முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய இளவரசி மேகன் கர்பமடைந்திருப்பதாக கடந்த ஆண்டு, இளவரசி யூஜின் திருமணம் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து அறிவிக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களிலே ஹரி – மேகன் தம்பதி அரண்மனையை விட்டு வெளியேறி, ஃபிரோமோர் குடிசையில் குடியேற உள்ளதாக அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது.
இதற்கு காரணம் இளவரசிகள் மேகன் – கேட் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் எனவும், தம்பதியினர் இருவரும் வில்லியம் – கேட் தம்பதிக்கு அடுத்த அறையில் இருக்க விரும்பவில்லை போன்ற பல்வேறு வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன.
இதுஒருபுறமிருக்க ஃபிரோமோர் குடிசையை சீரமைக்கும் பணிகளும் விரைந்து நடந்து வந்தன. தம்பதிகள் இருவரும் அரண்மனையை விட்டு எப்பொழுது வெளியேற உள்ளார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் அரச குடும்ப செய்திகள் குறித்து பேசி வரும் கிறிஸ் ஷிப், தம்பதியினர் இருவரும் குழந்தை பிறப்பதற்கு முன்னர், மார்ச் மாதத்திற்குள் ஃபிரோமோர் குடிசைக்கு சென்றுவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.






