இந்தியாவில் பெண் குழந்தை பிறந்ததால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என சாமியார் கூறியதால் பெற்ற குழந்தைகளை கொலை செய்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹைவ்ராவை சேர்ந்தவர் சஞ்சய். இவர் மனைவி சங்கீதா குப்தா. தம்பதிக்கு சந்தினி என்ற பெண் குழந்தை 72 நாட்களுக்கு முன்னர் பிறந்தது.
இந்நிலையில் குழந்தையின் கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்து அருகில் உள்ள இடத்தில் புதைத்துள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் சஞ்சய், சங்கீதா மற்றும் இறந்த குழந்தை சந்தினியின் தாத்தா அமர்நாத், பாட்டி ஆஷா மற்றும் சித்தி பூனம் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
சஞ்சய் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்கள் ஊருக்கு வந்த சாமியார் ஒருவர், எங்களுக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்தால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறினார்.
அவர் பேச்சை கேட்டு தான் கொலை செய்தோம் என கூறியுள்ளனர்.
இதனிடையில் சஞ்சய், சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து மர்மமான முறையில் இறந்தது தெரியவந்தது.
அந்த இரு குழந்தைகளையும் சந்தினியை புதைத்த இடத்தின் அருகிலேயே இவர்கள் புதைத்துள்ளனர்.
தற்போது சந்தினியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவரின் உடலும் அனுப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தம்பதியின் வாக்குமூலத்தை வைத்து மற்ற இரு குழந்தைகளையும் அவர்கள் தான் கொலை செய்திருக்கக்கூடும் என பொலிசார் நம்புகிறார்கள்.
ஆனால் சங்கீதா அளித்த வாக்குமூலத்தில், முதலில் இறந்த இரு குழந்தைகளும் தன்னிடம் தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறி இறந்ததாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.






